"முடியும் என்பதே மூச்சாகட்டும்"

சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International)
செயற்பாட்டு அறிக்கை (01/03/2017)

சிதம்பராகல்லூரி சர்வதேச பழைய மாணவர் சங்கம் லண்டனில் சட்ட பூர்வமாக பதிவு செய்யப்பட்டு கல்லூரியின் அபிவிருத்தி பணிகளில் நேரடியாக செயலாற்றிவருகின்றது. 2016 ஆம் ஆண்டு உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் மருத்துவ பீடத்திற்கு இரு மாணவர்கள் தகுதியானது பழையமாணவர் மற்றும் வல்வை மக்களுக்கு கல்வி அபிவிருத்தி பணியில் மிகுந்த நாட்டமேற்பட்டுள்ளது. கல்விமான்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்புடன் மேலும் பல கல்வி அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் மேற்கொள்வோம் என்று மகிழ்ச்சியுடன் அறியத்தருக்கின்றோம். சிதம்பராகல்லூரி சர்வதேச பழைய மாணவர் சங்கம் ஆரம்பித்து ஆண்டு நிறைவில் செயற்பாட்டறிக்கையினை மக்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.

 


1.ஆசிரியர் மாணவர் முகாமைத்துவ முறைமை SMS (School Management System) கணனிமயப்படுத்தல். 

Student Management System

மாணவர் ஆசிரியர் வரவு, கால அட்டவனை, மாணவர் தேர்ச்சி அறிக்கை, மாணவர் புள்ளி ஆய்வறிக்கை (வகுப்பு ரீதியான, பாட ரீதியான, வகுப்பு பிரிவு ரீதியான), ஆசிரியர் திறனாய்வு அறிக்கை, கணிப்பீட்டு பதிவேடு, விளையாட்டு பதிவுகள் (சான்றிதழ்கள், புள்ளிக் கணிப்புக்கள், வயது பிரிவில் சிறந்த வீரர் தெரிவு) நூலகம், கணக்குகள் அடங்கிய அனைத்து செயட்பாடுகளும் இலகுவாக கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.

 

2.லண்டனில் வடமாகாண கல்வி கருத்தரங்கு நடத்துவதற்கு  நிர்வாகசபை உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். சிதம்பராக்கல்லூரியில் குறுகியகால பகுதியில் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்தி பணிகள் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வியாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

NPC Secretory R Raveendran


3. CHITHAMBARA OSA INTERNATIONAL வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.

CHITHAMBARA OSA INTERNATIONAL
Sort Code: 60-14-31
Account Number: 57668353
IBAN Number: GB47NWBK60143157668353
BIC Code: NWBKGB2L


4. இடி மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக கணனி அறை கணனிகள் பாதிப்படைந்தன. செயலிழந்த Computer Network ஐ திருத்தி வழமையான செயட்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கணனி மயப்படுத்தப்பட்ட மாணவர் தேர்ச்சி அறிக்கைகள் தகுந்த நேரத்தில் தயாரித்து வழங்கப்பட்டன.

Network switch damage following a lightning strike


5.வல்வை 73 அமைப்பு உறுப்பினர் பழைய மாணவர் திரு ராமச்சந்திரன் (நேரு) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட கணினி கொழும்பிலுள்ள நிர்வாக சபை உறுப்பினர் ஊடாக பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.

Computer Donation


6.பௌதீகவியல் முப்பரிமான வீடியோ கற்பிதலை லண்டன் பொறியியலாளர் சூரியலிங்கம் ரமேஷ் மாணவர்களுக்கு ஆரம்பித்து வைத்தார்.

New “Effective Teaching” Method


7. புதிதாக கட்டப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள ஆராய்ச்சி நிலையத்தில் நிர்வாக சபை உறுப்பினர்கள் Computer networking, Server Installation Projector installation நேரடியாக நெறிப்படுத்தி பணியாற்றியிருந்தனர்.

Projector Installation at Field Work center

8. வல்வை 73 அமைப்பு உறுப்பினர் பழைய மாணவர் திரு ராமச்சந்திரன் (நேரு) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டாவது கணினி, லண்டனில் வசிக்கும் திரு திருமதி ராதாராம் தம்பதியினரால் அன்பளிப்பு செய்யப்பட்ட Server ஆகியவை வலய கல்வி பணிப்பாளர் திரு புஷ்பலிங்கம் முன்னிலையில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

Server Donated to Principal

 
9. மாகாணக்கல்வி அமைச்சின் Learning material Development Unit இணைந்து தயாரித்த பௌதீகவியல் முப்பரிமான பரிசோதனைகள் வீடியோக்கள் ஊடாக அளவியல் பாட மீட்டல் பயிற்சிகள் சிதம்பராகல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

Physics Video Lectures (Measurements)


10. மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிதம்பராக்கல்லூரிக்கு வழங்கவுள்ள மாடி கட்டிடதுக்குரிய காணி கொள்வனவு திட்டத்தை ஆரம்பித்து, ஒரு மாத அவகாசத்தில் வெற்றிகரமாக 4 பரப்பு காணி கல்லூரி வளாகத்துடன் இணைக்கப்ட்டுள்ளது.


11.சிதம்பராக்கல்லூரியின் கணணி மற்றும் கணணி வலையமைப்பு திருத்த வேலைகளை சர்வதேச பழைய மாணவர் சங்கம் கால தாமதமின்றி செயலாற்றி வருகின்றது. 


பௌதிக மனித வளங்களை மேம்படுத்தி நவீன தொழில் நுட்பங்கள் ஊடாக தரமான கல்வியை வழங்குவதன மூலம் ஆளுமை மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்க, விசுவாசம் மிக்க பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பேருதவியுடன் பணியாற்றும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி எம்மால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளிலும் பங்கு கொண்டு உதவி ஊக்கிவித்த அனைத்து பழைய மாணவர், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு இதம் கனிந்த நன்றியினையும் அன்பு கலந்த வணக்கத்தினையும் கூறி இவ்வறிக்கையினை நிறைவு செய்கின்றேம்.

 
சிதம்பரா கல்லூரி சர்வதேச பழைய மாணவர் சங்கம்