செயற்பாட்டு அறிக்கை (01/01/2016)

சிதம்பரக்கல்லூரியின் கணித விஞ்ஞான துறைகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் முதலாவது வேலைத்திட்டம் சங்கத்தால் ஆரம்பிக்கபட்டது. சென்ற ஆண்டில் கணித விஞ்ஞான துறைகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க முடியாமல் இருந்ததற்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு லண்டனில் உள்ள ஏனைய கல்வி சார் அமைப்புகளுடனும் இது தொடர்பாக கலந்துரையாடல்கள்  இடம்பெற்றது.  இவற்றினடிப்படையில் நிர்வாக சபையால் மேற்கொள்ளபட்ட செயற்பாடுகளின் விபரங்கள்:
 
1.  www.chithambaracollege.com இணையத்தளம் ஆரம்பிக்கபட்டு சர்வதேச வலையமைப்பு உருவாக்கப்பட்டது.
 
2.  27/11/2015 அன்று  CHITHAMBARA OSA INTERNATIONAL LTD பதிவு  செய்யப்பட்டு சங்கத்தின் ஸ்திரதன்மையை நிர்வாக சபையினர் உறுதிப்படுத்தினர். CHITHAMBARA OSA INTERNATIONAL LTD ஆனது limited by guarantee என்ற வகையறைக்குள் அடங்கும். 
 
3. கணித விஞ்ஞான உயர்தர (2016) மாணவர் / மாணவிக்கு மேலதிக வகுப்புகளுக்கான மூன்று மாத கொடுப்பனவாக ரூ 13,500.00 வழங்கப்பட்டது.
 
4. உயர்தர கணித விஞ்ஞான மேலதிக வகுப்புகள் நெல்லியடியில் மாத்திரமே இயங்குகின்றது. பெற்றோர் தங்கள் பிள்ளைகள்  சைக்கிளில் செல்வதில் உள்ள சிரமங்களுக்காக தயங்குகின்றனர். VEDA கல்வி நிலையம் வல்வையில் மேலதிக வகுப்புகள் ஆரம்பிக்க அனுசரணை வழங்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் வல்வை 73 அமைப்பு  இதற்கு அனுசரணை வழங்க முன்வந்தது. வல்வை 73 ஏற்கனவே எமது ஆராதனை மண்டப நிதி பங்களிப்பு செய்து, சிதம்பராக்கல்லூரி  கண்காணிப்பு காமெராக்கள்  பொருத்தும் திட்டத்தையும் நிறைவேற்றியிருந்தனர். உயர்தர  கணித விஞ்ஞான மாணவர்களுக்கான Additional learning resources தயாரிக்கும் பணி நிர்வாகசபை உறுபினர்களால் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
 
5. கணணி ஒன்றை உயர்தர கணித விஞ்ஞான மேலதிக வகுப்புகள் ஆரம்பிக்கும் VEDA கல்வி நிலையத்துக்கு வழங்க நன்கொடையாளி ஒருவர் முன்வந்திருந்தார். இந்த நன்கொடை நிதி நிர்வாகசபை உறுப்பினர் ஊடக VEDA விற்கு கொடுக்கப்பட்டு கணணி கொள்வனவு செய்யபட்டுள்ளது.
 
6. முதலாவது கணக்கறிக்கை தயாரிக்கபட்டு இத்துடன் இணைக்கபட்டுள்ளது.
 
விடுமுறைக்கு செல்லும் சிதம்பரா பழைய மாணவர்கள் நலன் விரும்பிகளை நீங்கள் கல்வி கற்ற பாடசாலையை  நேரடியாக சென்று பார்வையிடுமாறு மன்றாடுகின்றோம். அங்கு நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் தொடர்பான விபரங்களை அதிபர் ஆசிரியர்களிடமிருந்து பெற்றுகொள்ளலாம். 2015 இல் நடைபெற்ற அபிவிருத்தி பணிகள்  மற்றும் கல்லூரியை பார்வையிடும் புலம்பெயர் பழைய மாணவர் நலன் விரும்பிகள்  படங்களை இணைத்துள்ளோம்.
 
 
Mukunthan
கண்காணிப்பு காமரா அமைக்கும் திட்டத்தை நேரடியாக சென்று மதிப்பீடு செய்யும் வல்வை 73 பழைய மாணவர் திரு முகுந்தன் (லண்டன்)
 
நிர்வாக சபை உறுப்பினர் திரு யோகேந்திரா (கனடா) சிதம்பரா உயர்தர நவீன விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளை பார்வையிடுகின்றார்.