வல்வை 73 அமைப்பினரால் சிதம்பரா கல்லூரிக்கு கணணி அன்பளிப்பு

Valvai73 Computer Doanation

 

அண்மையில் இடி மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக கணனி அறை கணனிகள் பாதிப்படைந்தன. இரண்டாம் தவணை பரீட்ச்சை முடிவுற்று பெறுபேறுகள் கணனியில் பதியப்பட்டு மாணவர் அறிக்கை தயாரிப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியிருந்தது.

 

பிரத்தியேகமாக சிதம்பரா கல்லூரியின் தேவைகளை அறிந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் CHITHAMBARA OSA INTERNATIONAL புலம்பெயர்  கல்வி பணியாளர்கள்  கவனத்துக்கு கொண்டுவந்ததன் பயனாக வல்வை 73 அமைப்பு இதட்கு உதவ முன்வந்துள்ளது. இரு கணனிகளை  வல்வை 73 அமைப்பு உறுப்பினர் திரு ராமச்சந்திரன் (நேரு) கொழும்பிலுள்ள  CHITHAMBARA OSA INTERNATIONAL நிர்வாக சபை உறுப்பினரூடாக கையளித்துள்ளார். Beetatec நிறுவன பொறியியலாளர்கள் செயலிழந்த Computer Network ஐ திருத்தி வழமையான செயட்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

 

Engineer Working on School Computer Network

1AB தர  பாடசாலையில் கணனி மயப்படுத்தப்பட்ட மாணவர் தேர்ச்சி அறிக்கை தயாரிப்பதில் கல்லூரி நிர்வாகத்திட்கு CHITHAMBARA OSA INTERNATIONAL தகுந்த நேரத்தில்  தொழில்நுட்ப உதவிகளை  வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தேவை எங்குள்ளதோ உதவிக்கான தெரிவும் அங்குதான் நடைபெறவேண்டும். காலந்தாழ்த்தி வரும் கரம்கொடுப்புகளால் யாரும் பயனடையப் போவதில்லை. கல்வித்தாகம் கொண்டிருந்தும் அதற்கான வசதிகளற்றிருப்போரை நோக்கி நம் உதவிக்கரங்களை நீட்டுவதற்கான காலம் இன்னமும் தாமதமாகிவிடவில்லை.

ஆரோக்கியமான கல்வியே மனிதவளர்ச்சியின் மூலாதாரம். உறுதியான சமூகக்கட்டமைப்பே ஒரு இனத்தின் காப்புறுதி. மாணவர்களுக்கு கல்வியூட்டுவதன்மூலம் ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தனது சுயபலத்தில் நிற்பதற்கான விதை விதைக்கப் படுகிறது.

'பிறர் பிள்ளை தலை தடவ, தன் பிள்ளை தானாய் வளரும்'