சிதம்பரக்கல்லூரிக்கு சர்வதேச பழைய மாணவர் சங்கம் கணணிகள் அன்பளிப்பு

நாட்டில் போர்சூழல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புலம்பெயர் வல்வெட்டித்துறை மக்கள் சிதைவுற்று இருந்த விஞ்ஞான ஆய்வுகூடங்கள் ஆராதனை மண்டபம் மலசல கூடங்களை புதிதாக நிர்மாணித்து பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களையும் அன்பளிப்பு செய்துள்ளனர். இதன் பயனாக இருபது வருட இடைவெளியின் பின்பு மருத்துவபீடத்துக்கு ஒரு மாணவன் தெரிவாகியுள்ளார். தகவல் தொழில்நுட்ப கல்வி அபிவிருத்தியின் தேவையை பூர்த்தி செயுமுகமாக 5 கணனிகள் மற்றும் கணனி உபகரணங்களை சிதம்பரக்கல்லூரி சர்வதேச பழைய மாணவர்சங்க பொருளாளர் மா.ரமேஷ் வழங்கியுள்ளார். அத்துடன் இணைய தொடர்பு சீராக்கப்பட்டு கணனி அறை மாணவர்களின் முழுமையான உபயோகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 இக்கணணிகளை ரமேஷின் தந்தையார் (முன்னாள் சிதம்பரக்கல்லூரி கணித ஆசிரியரான மாணிக்கதியாக ராஜா மாஸ்டர்) தாயார் (சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர்) ம.ஜீவகன் (பெற்றோர்) அதிபரிடம் கையளித்தனர். இவ்வைபவத்தில் பல்துறை ஆசானும் முன்னாள் அதிபருமான திரு செல்வநாயகம் முதலாவது கணணியை இயக்கி ஆரம்பித்து வைத்தார். பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பெற்றோர் ஒன்றிணைந்து இரு வார காலத்தில் இவ்வேலை திட்டத்தை நிறைவேற்றியது சிறப்பம்சமாக அமைந்துள்ளது.