சிதம்பராக்கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா 2017 

சிதம்பராக்கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா 2017 கல்லூரி அதிபர் திரு குருகுலலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கௌரவ கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கலந்து சிறப்பித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் வகுப்பு ரீதியாக முதன்நிலை பெற்ற மாணவர்கள், மாகாண மற்றும் மாவட்ட போட்டி நிகழ்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பல்கலை கழகங்களுக்கு தெரிவானவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

வல்வை மண்ணின் பெருமையையும் கல்லூரியின் உயந்த சித்தியடைவு வீதத்தையும் பாராட்டிய அமைச்சர் கல்லூரியின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார். பெற்றோர் வெளியூர் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்ப்பதை நிறுத்தி வளம் மிக்க சிதம்பராக்கல்லூரியில் கல்வி தொடருமாறும் கேட்டுக்கொண்டார். தரமான கல்வியில் முதலிடம் பெற்றுள்ள பின்லாந்து நாட்டின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு வடமாகாண கல்வி தரத்தை உயர்த்த முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

நன்றியுரை வழங்கிய பிரதி அதிபர் திரு லிங்கனதாஸ் நூலக மேல் மாடி கட்டிட பூர்த்தி செய்தல், ஆசிரியர் ஓய்வறை, சிற்றூண்டிச்சாலை மற்றும் பாண்ட் வாத்திய இசைக்கருவிகள் கல்லூரியின் தேவைகளாக இருப்பதாகவும் பழையமாணவர்கள், நலன்புரி அமைப்புகள் நிறைவேற்ற முன்வருவதை தாம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.