வல்வை நலன்புரிசங்கம் (ஆஸ்திரேலியா ) சிதம்பராகல்லூரி காணி கொள்வனவுக்கு

நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது.

வல்வை நலன்புரிசங்கம் (ஆஸ்திரேலியா ) நிர்வாக சபையினர்

 ஆஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கதின் 12 வது நிர்வாகசபை கூட்டம் 18-09-2016 அன்று காலை 11 மணியளவில் Toongabbie, Sydney இல் நடைபெற்றது. அதிபர் திரு குருகுலலிங்கம் மற்றும் வல்வை பழைய மாணவர் சங்க நிர்வாக சபையினரின் மின்னஞ்சல் கடிதங்களை பரிசீலித்த நிர்வாக சபையினர் காணி கொள்வனவுக்காக சிதம்பராகல்லூரிக்கு 2000 ஆஸ்திரேலியா டொலர்களை கொடை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.

இராணுவ முகாமாக்கப்பட்டு சேதமடைந்த சிதம்பராக்கல்லூரி கட்டிடங்களுக்கு போர் முடிந்தும் எந்தவொரு அரசாங்க உதவியும் தரப்படவில்லை. இந்நிலையில் பௌதீக, மானிட, உட்கட்டமைப்பு, சிறந்த பயிற்சியுள்ள ஆசிரியர்கள் போன்ற வசதிகளை சிதம்பராக்கல்லூரிக்கு வழங்க 30 மில்லியன்கள் வடமாகாண சபை ஒதுக்கி இருந்ததை லண்டனில் நடத்தப்பட்ட வடமாகாணக் கல்வி மகாநாட்டிற்கு வருகை தந்த திரு ராசா இரவீந்திரன் (செயலாளர், கல்வி அமைச்சு, வட மாகாணம்) வல்வை மக்களுடனான சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” புதிய செயல்திட்டம் 2016 கீழ் தற்போது 15 மில்லியன் ரூபா புதிய மாடி கட்டிடத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய போதுமான நிலம் எமது கல்லூரியில் இல்லாது இந்நிதி திரும்பி போகும் நிலையில் ஆஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கதின் இந்த உடனடி தீர்மானம் மிகவும் வரவேற்கத்தக்கது. போரினால் சின்னாபின்னப்பட்ட வல்வையின் கல்வி மற்றும் மருத்துவம் மேம்பாட்டுக்காக ஆஸ்திரேலியா வல்வை நலன்புரிசங்கம் நிதி உதவி வழங்கி வருகின்றது. 2012 இல் ஆய்வு கூட புனரமைப்புக்காக 1293 பிரித்தானிய பவுண்ட்ஸ் சிதம்பராகல்லூரிக்கு வழங்கியிருந்தது. இவர்கள் மகத்தான பணி தொடர சிதம்பராக்கல்லூரி சமூகம் மற்றும் வல்வை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.