புதிய மாடி கட்டிடத்துக்காக 4 பரப்பு நில கொள்வனவு

புதிய மாடி கட்டிடம் அமையவுள்ள பாடசாலை தெற்கு புற தோற்றம்

"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை”  என்ற புதிய செயல்த்திட்டம் 2016 இல் சிதம்பராக்கல்லூரி இணைக்கபட்டுள்ளது தங்கள் அறிந்தது. நகரப்புற பிரபல்ய பாடசாலைகளில் உள்ள பௌதீக, மானிட, உட்கட்டமைப்பு,  சிறந்த பயிற்சியுள்ள ஆசிரியர்கள் போன்ற வசதிகளை சிதம்பராக்கல்லூரியில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. புதிய மாடி கட்டிட அமைப்புக்காக 15 மில்லியன் ரூபா  கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்டு இரு வாரங்களுக்குள் அடிக்கல் நாட்டும் பணி ஆரம்பிக்க வேண்டும். இருப்பினும் இந்த மாடி கட்டிடத்திட்கான காணி பற்றாக்குறையாக உள்ளது. 
 
வகுப்பறைகள் பற்றாக்குறை காரணமாக  திருத்தி அமைக்கப்பட்ட ஆய்வு கூடங்களிலும் ஆராதனை மண்டபத்திலும் சில வகுப்புகள் நடாத்தப்படுகின்றன. புதிய  மாடி கட்டிடம் அமைக்கப்படும் பட்சத்தில் கல்லூரியின் வகுப்பறைகள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். கல்வி அமைச்சினால் நேரடியாக கட்டப்படும் இந்த புதிய  மாடி கட்டிடத்துக்காக   4 பரப்பு  காணி கொள்வனவு செய்து தருமாறு பழையமாணவர் சங்கங்கள் மற்றும் நலன்புரி அமைப்புகளை தாழ்மையுடன்  வேண்டிக்கொள்கின்றேன்.
 
அதிபர்
 
சிதம்பரா கல்லூரி
 

 

 மேலதிகமாக தேவைப்படும் காணி வரைபடம்